அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட அக்குறணை ஷியா ஞாபகார்த்த வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தாதியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியை அப்புறப்படுத்துமாறு வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் கூறியதனையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தரும் தாதியும் ஷியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.