சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (H3N8) முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சலினால் உயிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.