எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் திருட்டு மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடுவதற்கு இவ்வாறான தகவல்களை பயன்படுத்தக் கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, வீட்டுக்கு வெளியில் இருக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.