உலகில் உணவு பொருட்களின் விலைப் பணவீக்கம் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் உலக வங்கியால் வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியில் இலங்கை 10ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கையில் உணவு பொருட்களின் விலைப்பணவீக்கம் 54 சதவீதமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இது 86 சதவீதமாகக் காணப்பட்டது. வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதன் பிரதிபலனாக இந்த முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது.