Date:

தாஜ்மஹால், குதூப்மினாரை இடித்து கோயில்கள் கட்ட வேண்டும்… பாஜக எம்.எல்.ஏ

தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் உடனடியாக இடிக்கப்பட்டு, உலகின் மிக அழகான கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று அசாம் பாஜக எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

12-ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து முகலாய வரலாறு மற்றும் நாதுராம் கோட்சே குறித்த குறிப்பிட்ட உள்ளடக்கத்தை NCERT நீக்கியதாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், அசாம் பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி, தாஜ்மஹாலை இடிக்க வேண்டும், அது “காதலின் சின்னம் அல்ல” என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பரவலாக பகிரப்பட்ட வைரல் வீடியோவில், முகலாய பேரரசரான ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜை “உண்மையாக நேசித்தாரா” என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குர்மி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் ஆகியவற்றை இடித்துவிட்டு கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை அவர் வலியுறுத்தினார். மரியானி சட்டமன்ற உறுப்பினரான இவர், தனது ஒரு வருட சம்பளத்தை அதற்கான நிதியாக வழங்குவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

“தாஜ்மஹால் மற்றும் குதுப்மினார் உடனடியாக இடிக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறேன்.

இந்த இரண்டு நினைவுச் சின்னங்களுக்குப் பதிலாக, உலகின் மிக அழகான கோவில்கள் கட்டப்பட வேண்டும். அந்த இரண்டு கோயில்களின் கட்டிடக்கலை வேறு எந்த நினைவுச்சின்னங்களும் அவற்றை நெருங்க முடியாத வகையில் இருக்க வேண்டும்,” என்றார்.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று இந்து ராயல்டியின் பணத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டது என்றும், மும்தாஜ் மறைந்த பிறகு 17 ஆம் நூற்றாண்டின் மன்னர் ஏன் மேலும் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்றும் கேள்வி எழுப்பினார்.

“1526 ஆம் ஆண்டில், முகலாயர்கள் இந்தியாவிற்கு வந்தனர், பின்னர் தாஜ்மஹாலை உருவாக்கினர். ஷாஜகான் தாஜ்மஹாலை இந்து மன்னர்களிடம் இருந்து எடுத்த பணத்தில் கட்டினார் அது நமது பணம்.

அவர் தனது நான்காவது மனைவிக்காக தாஜ்மஹாலை உருவாக்கினார். அவர் மொத்தம் ஏழு மனைவிகளை மணந்தார், மும்தாஜ் நான்காவது மனைவி.

அவர் மும்தாஸை மிகவும் நேசித்திருந்தால், பின்னர் ஏன் அவர் மேலும் 3 மனைவிகளை திருமணம் செய்தார்,” என்று குர்மி மேலும் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373