தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானை தன்வசமாக்க பல முயற்சிகளை சீனா எதிர்கொண்டு வருகிறது.
மேலும் தைவானுடன் அமெரிக்கா நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்ற நிலையில் சீன கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தென் அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற தைவான் அதிபர் நாடு திரும்பும் வழியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.
தைவானை சுற்றி சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் என கடுமையான போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.