எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்ணாயக்க தெரிவிக்கையில்,
எமது ஒன்றிணைந்த நீர்வழங்கல் தொழிற்சங்கம் 4ஆம் திகதி அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்ததோம்.
ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் சபை தலைவராே அல்லது அமைச்சராே எமது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட நேரம் வழங்கவில்லை.
அதனால் எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள நாங்கள் திர்மானித்தாேம். அதன் பிரகாரம் நாங்கள் அலுலக மற்றும் நுகர்வோர் சேவை நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்து ஒதுங்கிக்கொள்கிறோம்.
இதேவேளை, இவ்வாறான நடவடிக்கை காரணமாக நீர் தடைகள் ஏற்படும்போது. அதனை திருத்தும் நடவடிக்கைகளில் சற்று தாமதம் ஏற்படும். அதனை திருத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம். அதனால் ஒரு சில இடங்களில் நீர் விநியோகம் குறைவடையும் ஆபத்து இருக்கிறது.