Date:

 எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! சிரேஷ்ட அதிகாரி எச்சரிக்கை -வெளியான காரணம்

எதிர்வரும் சில நாட்களில் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பெட்ரோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவரின் நடைமுறைக்கு சாத்தியமற்ற முடிவினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் முற்பதிவுகளை காசோலைகள் மூலமாகவே வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

எனினும், நிதிப்பிரிவின் அதிகாரி எரிபொருள் முற்பதிவுகளை பணம் மூலம் மாத்திரம் மூலமே செய்ய முடியும் என அறிவித்ததை அடுத்து, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களால் முற்பதிவுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (05) பூரணை தினம் வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் பணம் கிடைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக குறித்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்திருப்பதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...