Date:

பொலிஸ் கான்ஸ்டபிள் குடும்பம் உயிரிழப்பு

வெல்லவாய – தனமல்வில வீதியின் நுகயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்தசம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளதுடன், கெப் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 44 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், 42 வயதான அவரின் மனைவி மற்றும் 70 வயதான தந்தை ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த சிறுவனொருவன் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள 'QR' ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01)...

அரிசி வகைகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு

உள்நாட்டு சந்தையில் தற்போது நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி...

சோஹாரா புகாரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சோஹாரா புகாரியினால்...

பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு

மின்சார கட்டண உயர்வுக்கு இணையாக, பிரைட் ரைஸ் (Fried Rice) மற்றும்...