Date:

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று புதிய நடவடிக்கை

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில், தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று (24) தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...