லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை, இன்று (4) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவாலும் , 5 கிலோ சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும் , 2.3 கிலோ சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைவடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
*புதிய விலைகள்* 12.5 கி.கி. சிலிண்டர் : 3728 ரூபா
5 கி.கி. சிலிண்டர் : 1502 ரூபா
2.3 கி.கி. சிலிண்டர் :700 ரூபா