புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விற்பனையாளர்கள் காலாவதியான பொருட்களை கொண்டு வந்து நகரங்களில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.