இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் தற்போதுவரையில் வௌியாகவில்லை.
இதேவேளை, இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.