Date:

இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமணம்

அநுராதபுரத்தைச் சேர்ந்த இளைஞனும் மாத்தளையை சேர்ந்த யுவதியும் பஸ் நிலையத்தில் சந்தித்து 2 மணி நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் ஒருவரிடம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவருக்கு இடையில் குருநாகல் பஸ் நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தளை பிரதேசத்தின் வர்த்தக பகுதியில் பணிபுரியும் இந்த யுவதி, தங்குமிடத்திற்கு வருவதற்காக குருநாகல் பஸ் நிலையத்தில் இருந்த போது, ​​இளைஞன் ஒருவரை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் கட்டுநாயக்க செல்லும் பஸ்ஸில் ஏறி உரையாடிக் கொண்டிருந்த போது, ​​கொடதெனியவைக் கடக்கும் போது “திருமணம் செய்து கொள்வோம்” என இளைஞன் யோசனை முன்வைத்துள்ளார்.

இந்த யோசனையுடன் இருவரும் உடனே குறித்த பஸ்ஸில் இருந்து திவுலப்பிட்டிய நகரில் இறங்கி முச்சக்கர வண்டியில் திருமண பதிவாளர் அலுவலகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பதிவாளரை சந்தித்த இளைஞன், திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த முச்சக்கர வண்டி சாரதியிடம் பதிவாளர் தம்பதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அந்த சாரதியும் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர், பதிவாளர் பெண்ணிடம் தகவல் வினவிய போது அவர் மாத்தளையை சேர்ந்தவர் எனவும் இளைஞன் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

திடீர் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து பதிவாளர் இளம்பெண்ணிடம் உண்மைகளை விளக்கியதாகவும், இருவரது வசிப்பிடங்களும் வெவ்வேறானதால் திருமணத்தை பதிவு செய்ய முடியாத நிலை குறித்தும் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...