இலங்கையிலிருந்து இந்திய – தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
இவ்வாறு இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பயணியொருவரும் , சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்திய சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இவர்கள் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னர் விமானநிலையத்தில் 3 அல்லது 4 கொவிட்நோயாளிகள் இனம் காணப்படுவார்கள் தற்போது 6 அல்லது 7 பேர் இனங்கானப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது ஆரோக்கியமான விடயமல்ல என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.