எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது.
சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை முன்னிட்டு நேற்று (30) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்தார்.
அந்தவகையில், ஸ்பூன், ஃபோர்க்ஸ், நெகிழி மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் குடிநீர் கோப்பைகள் உள்ளிட்ட பொலிதீன் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அந்த சபையின் தலைவர் தெரிவித்தார்.