உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது.
உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் காலிஸ்தான் கொடிகளை பறக்கவிடப்படும் என நீதிக்கான சீக்கியர் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலிஸ்தான் பிரச்சினையை சர்வதேச மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
ஜி-20 நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை மாநாடு (CSAR) மார்ச் 28-30 வரை உத்தரகாண்டின் ராம்நகரில் நடைபெறுகின்றது.