இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் இந்துத்துவா குழுவினால் மசூதியின் இமாமை தாக்கி அவரது தாடியை வெட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற இந்து மத முழக்கத்தை முழங்க மறுத்ததற்காக இந்துத்துவா கழுவினால் மசூதிக்குள் புகுந்து இமாம் ஜாகிர் சயீத் கவாஜாவை தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் மசூதிக்குள் புனித குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது இடம்பெற்றதாக இமாம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மசூதிக்குள் நுழைந்து குறித்த குழுவினர் , குரான் ஓதிக் கொண்டிருந்த தன்னை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லும்படி வற்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
சொன்னதைச் செய்ய மறுத்ததால், மூன்று நபர்கள் அவரை மசூதிக்கு வெளியே அழைத்துச் சென்று தாக்கினர். பின்னர் தான் மயக்கமுற்றதாகவும் இமாம் கூறினார். சுயநினைவு திரும்பியபோது, தனது தாடி வெட்டப்பட்டிருப்பதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போகர்தன் பொலிஸ் நிலையம் ர், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, அன்வர் கிராமத்தில் அருகமை ஊர்களிலும் பதட்டத்தை தணிக்க, குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு தொடர்ந்து வருகிறது.