இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக 400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றுால் லீற்றரின் விலை தற்போது 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.