Date:

இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்

பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தனது போராடத்தை முன்னெடுத்துள்ளார்.

காலிஸ்தான் ஆதரவாளரான இவரை பொலிஸார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூரகங்களின் முன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் லண்டனில் உள்ள இந்திய தூரதகத்துக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவளர்கள் இந்திய தேசியக் கொடியை அகற்றினர். கனடாவில் காந்தி சிலையையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூரதகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவை திட்டி வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர். வன்முறையை தூண்டும் விதத்தில் அவர்கள் பேசினர். தாக்குதல் நடத்துவதற்காக மர குச்சிகளையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.

வன்முறை ஏற்படவுள்ளதை உணர்நத அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அமைப்பினர் உள்ளூர் பொலிஸாரை உடனடியாக வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர்.

இதையடுத்து 3 பொலீஸ் வேன்கள் தூதரகம் முன்பு நிறுத்தப்பட்டது. தூதரகத்தின் தேசிய கொடிக்கம்பத்தை நெருங்க முயன்ற போராட்டக்காரர்களை, சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் அப்புறப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை

பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24)...

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

சுமார் 17 வருடங்களாக தலைநகரில் இயங்கி வரும் Amazon College &...

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே...

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...