மாவனெல்லை – ஹெம்மாதகம வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீடொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று (26) மாலை கொட்டாவத்த, தெவனகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரம் இருந்த நிலையில், அவருக்கு விபத்தில் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.