சந்தையில் ஒருகிலோகிராம் பால்மாவின் இன்று முதல் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பபை பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணத்தினால், இன்று (27) முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளது.
சந்தையில் பால்மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது 100 – 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் பால் தேநீர் விற்கப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப்பொதி விலையை குறைப்பது தொடர்பில் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்திடம் வினவியது, அதற்கு பதிலளித்த அவர்,
உணவுப் பொதியின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆயிரம் ரூபாக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட மீன்கள் தற்போது 600 ரூபாவுக்கும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
சந்தையில் மரக்கறிகளின் விலைகளும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.பருப்பு, கிழங்கு என்பற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.
நாட்டு மக்கள் நாளாந்தம் மூன்று வேளை முறையாக உண்பதுக்கு சரியான வேலைத்திட்டங்கள் இல்லை.என்பதால் எமது சங்கம் வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உணவுப் பொதியின் விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.எனவே, உணவுப் பொதிகளின் விலைகள் குறைக்கப்படாவிட்டால், அதனை வாடிக்கையாளர்கள் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.