Date:

வருமானத்தை இழந்துள்ள பஸ் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு தொகை பணத்திற்குரிய வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதனை தவிர, வருமானம் இழந்துள்ள பஸ் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்குரிய பணத்திற்கான வவுச்சர்களும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிவாரண செயற்றிட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...

நெறிமுறைகளுடனான AI-க்கு நாம் தயார் – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் 'AI...

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

  2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக்...