Date:

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு (Pics)

1940 லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் இலங்கை அரசியல் தலைமைகள், இராஜதந்திர அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அரசாங்கப் பிரதிநிதிகள், பிரபல வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என பெருமளவிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்துதெரிவித்த பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பரூக் பர்கி அவர்கள்,

பாகிஸ்தானும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருங்கிய உறவுகளை தொடர்ந்து பேணி வருகின்றன.

வர்த்தகம், பாதுகாப்பு, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளில் பாகிஸ்தான் – இலங்கை உறவு அடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் , இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததோடு இரு நாடுகளும் தமது 75 வருட நட்புறவைக் கொண்டாடும் நிலையில், இந்த வருடம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் விசேடமானது எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

1தேசிய தின வரவேற்பையொட்டி கலாச்சார கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியின் போது பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ட்ராக் வண்டி கலை, ஆடைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...