Date:

Breaking: பிறை தென்படவில்லை ! ரமழான் நோன்பு ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் வௌ்ளிக்கிழமை ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் வளிமண்டலவியல் திணைக்கள  அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் எப்பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை.

எனவே ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி நாளை  மறுதியம் வௌ்ளிக்கிழமை புனித நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி...

இன்று முதல் தபால் கட்டணங்களில் திருத்தம்

இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

தேர்தலில் Sanae Takaichi அபார வெற்றி

ஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த அக்டோபரில் பதவி...

சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப....