Date:

நீதிச்சேவை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

திமன்றத்தில் ஆஜராகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நபர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையிலான கட்டளைகளை அநாவசியமான முறையில் பிறப்பிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு சுற்றுநிரூபத்தினூடாக நீதிபதிகளுக்கு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையின் கீழ், நீதிமன்ற செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய வழக்குகள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், ஏனைய வழக்குகள் அறிவித்தல்களினூடாக ஒத்திவைக்கப்படுவதாகவும் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...