Date:

“1984” சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில்தனது தந்தைக்கு நடந்த கசப்பான அனுபங்களை வௌிப்படுத்திய டாப்ஸி

நடிகை டாப்ஸி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தனது தந்தையின் பதிவுகளை நினைவுபடுத்தியுள்ளார்.

நடிகை டாப்ஸியின் சக்தி நகரில் இருந்த அவருடைய தந்தையின் குடும்பம் வீடு கலவரக்காரர்களால் உடைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Taapsee Pannu Feels We Are Venting Out Anger Without Being Aware Of Its Repercussions - Filmibeat

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று சில ஆண்டுகளுக்குப் பிறகு தான் நடிகை டாப்ஸி பிறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கலவரத்தின் போது தனது குடும்பத்தினருடன் மோசமான அனுபவங்களை அனுபவித்திருந்தாலும் அதனை சொல்லி ஒருநாளும் தனது குடும்த்தினார் தன்னை வளர்த்ததில்லை என்றும் தான் ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவள் என்பதை அவள் வயதாகும்போது உணர்ந்தாகவும் தி லாலன்டோப்பிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Taapsee Is Grateful Her Parents Aren't Living Near Hotspots | HerZindagi

கலவரம் பற்றிய நினைவுகள் குறித்து அவரிடம் கேட்டபோது, ​​ இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். “என் பெற்றோருக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. என் அம்மா கிழக்கு டெல்லியில் வசித்து வந்தார். எனது தந்தை சக்தி நகரில் வசித்து வந்தார். அந்தக் காலத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தும், நான் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். என் அம்மா எங்களிடம் நகரத்தின் பக்கம் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் சக்தி நகரில் வாழ்ந்த ஒரே சீக்கிய குடும்பம் தனது தந்தையின் குடும்பம். நாங்கள் எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு காரை நிறுத்தியிருந்தோம்.

Taapsee Pannu Biography, Height, Weight, Age, DOB, Family, Affairs, Movies and More

கலவரக்காரர்கள் வந்தபோது குறித்த கார் தனது குடும்பத்தை சிக்கலில் சிக்க வைத்ததாக டாப்ஸி பண்ணு கூறினார். “மக்கள் வாள்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் வந்தபோது, ​​அவர்கள் காரை கண்டார்கள். அக்கம்பக்கத்தில் நாங்கள் மட்டுமே சீக்கிய குடும்பம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

எங்கள் குடும்பம் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு ஒளிந்து கொண்டது, ஓடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனென்றால் அவர்கள் சூழ்ந்துள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். நாங்கள் தங்கியிருந்த வீட்டில் நான்கு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்தனர். மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள்.

கலவரக்காரர்கள் வந்தபோது எங்களைப் பாதுகாத்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டு வாசலுக்கு வருவார்கள், ஏனென்றால் அவர்கள் காரைப் பார்த்தார்கள், அது எங்களுடையது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் நாங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டோம் என்று சொன்னார்கள். காரை எரித்தனர். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களைப் பாதுகாத்ததால் நாங்கள் உயிர் பிழைத்தோம். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷித மற்றும் டெய்சியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

  யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன்...

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

தேசபந்துவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

விளக்கமறியலில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி...

2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373