தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸூடன் மோதிக்கொண்ட விபத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.