குறித்த நோயால் இரண்டு நோயாளிகள் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், குறித்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா (Listeria) நோயால் உயிரிழந்தமை சுகாதாரத்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் லிஸ்டீரியா நோயால் பீடிக்கப்பட்டு, நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவருக்கு லிஸ்டீரியா நோய் தொற்றியுள்ளமை, ஆரம்ப பரிசோதனைகளில் உறுதியானதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.