Date:

யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்!!

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்

இவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணினி வகுப்பிற்குச் சென்ற குறித்த யுவதி இரவு வெகுநேரமாகியும் பஸ் வராத காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த யுவதியை வீட்டினுள் இழுத்துச் சென்றதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் யுவதியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது யுவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...