தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரம், மின்சாரம், பெற்ரோலியம் அத்தியாவசிய சேவைகள் போன்ற பல துறைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டன.