இந்த வருடம் மேலும் யூரியா உரத்தின் விலை குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வழங்கும் நிகழ்வை நேரடியாக அவதானித்தபோதே அமைச்சர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 முதல் 9000 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.
உரம் விவசாயிகளுக்கு இலவசமாக ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ ரி.எஸ்.பி அல்லது மண் உரம் வழங்க விவசாயத்துறை பரிந்துரைத்துள்ளது.”என்றார்.