துருக்கி,நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “Light for Life” அமைப்பினால் நன்கொடை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் தலைவர் ஸெய்னின் பரிந்துரையில் அடிப்படையில் ரூபாய் பத்துமில்லியன் பெறுமதியான காசோலையை அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் ராகிபே டெமட் செகெர்சியோக்லு அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வு நேற்றைய தினம் (09) துருக்கி தூதுவராலயத்தில் இடம்பெற்றது,இதன்போது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான தொழிலதிபர் பைசல் புஹாரி, எம் ஐ எம்.இம்தியாஸ்,உஸ்மான் ஜௌபர், அஸ்ரின் ஸஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.