டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 307.36 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 313.77 ஆக காணப்படுப்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (09) காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 325.52 ஆக குறைவடைந்துள்ளது.
கடந்த சில நட்களாக நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.