இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக Prima மற்றும் Serendib நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 15 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
டொலர் விலை குறைவடைந்து வருவதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.