Date:

தம்புள்ளையில் தனக்கு உணவு நீர் வழங்கிய இளம் குடும்பஸ்தரின் மரணத்திற்கு வீட்டுக்கு வந்த யானை செய்த செயல் – கண் கலங்க (video)

இலங்கையில் யானை ஒன்றின் செயற்பாடு பலரை கண்கலங்க வைத்துள்ளதுடன் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.

தம்புள்ளை – கண்டலம பிரதேசத்தில்  திடீர் சுகயீனம் காரணமாக கடந்த வாரம் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபர் யானைக்கு உணவு, நீர் வழங்கி வந்துள்ளார்.தனக்கு உணவு, நீர் வழங்கிய எஜமானின் இழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத யானை கண்ணீர் விட்டு அழுதுள்ளது இந்த சம்பவம் பார்ப்பவர்களின் மனங்களை நெகிழவைத்துள்ளது.

உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக யானை சென்றுள்ள நிலையில் மண்டியிட்டு அஞ்சலியும் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவரின் உறவினர்களின் கைகளை பிடித்து யானை சோகத்துடன் தனது கவலையை வெளிப்படுத்தியதுடன், அங்கிருந்து சென்றுள்ளது.

ஐந்து அறிவு படைந்த யானையின் இந்த செயற்பாடு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...