நாளைய தினம் (1) திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் வசதிக்காக பாடசாலை, அலுவலக சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் சகல பஸ்களையும் நாளை இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
அரச, அரை அரசு, தனியார் மற்றும் தோட்டங்கள் உட்பட பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்சார் தொழிற்சங்கங்கள் நாளை (1) பாரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நாளைய தினம் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டாலும், அனைத்து பஸ்களையும் வழமைப் போன்று இயக்க பொது பஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.