ருஹுணு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று (26) முதல் ஒரு வார காலத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகத்தின் துணை வார்டன், அவரது தாயார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது மாணவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முன் ருஹுணு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்களை பல்கலைகழக வளாகம் மற்றும் விடுதியிலிருந்து வௌியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.