தேசிய மக்கள் சக்தியினரால் தற்சமயம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டுள்ளதை காணமுடிகிறது.
இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் காரணமாக தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரை பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த போராட்டத்தின் மீது பொலிஸார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டம் தொடந்து இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.