முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி ரணில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டின் ஜனநாயகத்திற்கும்,அரசியலமைப்பிற்கும் எதிராக செயற்படும் போது ஏற்படும் விளைவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் அல்ல அதனால் அவருக்கு மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை. அரசியல் அமைப்புக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டிப்பார்க்க வேண்டும் என்றார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நீதிமன்றத்தின் ஊடாக எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.தேர்தலை பிற்போடுமாறு அரசுக்கு சார்பான நபர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் முன்வைத்த விடயங்கள் அனைத்தும் பொய்யானது.
,மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அக்கறையில்லை,தான் குறிப்பிடுவதே அரச சுற்றறிக்கை என்று சர்வாதிகரமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முடிவு எவ்வாறு அமைந்தது என்பதை ஜனாதிபதி என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஜனாதிபதி ரணிலினால் தேர்தலை மட்டும் தான் பிற்போட முடியும்,ஆனால் மக்களாணையை அவரால் ஒருபோதும் வெற்றிக் கொள்ள முடியாது. அடுத்த முறை தேசிய பட்டியல் ஊடாக கூட நாடாளுமன்றத்திற்கு வர முடியாத நிலையே அவருக்கு ஏற்படும் என்றார்.