Date:

மின் நிலையத்தை இயக்குவதில் பாரிய சிக்கல் – மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம்

எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாத நிலையில் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் இந்த நிலை ஏற்படலாம் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேர் மாத்திரமே பணியாற்றுகின்றனர்.

மேலும், தொடர்ச்சியாக பொறியியலாளர்கள் பற்றாக்குறை நீடிக்குமாக இருந்தால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...