Date:

முதியவர்களை இலக்கு வைக்கும் கும்பல்

யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் மாத்திரம் 30இற்கும் மேற்பட்ட பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாண புறநகர் பகுதிகளான சுன்னாகம், தெல்லிப்பளை, மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபரொருவர் , தான் அப்பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , வீடுகளுக்குள் சென்று சமுர்த்தி உதவிகளை பெற பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்காக பணம் செலுத்த வேண்டும் என கூறி 5,000 ரூபா முதல் 10,000 ரூபா வரையில் பெற்று மோசடி செய்துள்ளார்.

அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் வேலைகளுக்கு சென்ற வேளைகளில், வீடுகளில் முதியவர்கள் தனித்து இருக்கும் வேளைகளை பயன்படுத்தி வீடுகளுக்குள் சென்று ஏமாற்றி பணம் வாங்கியுள்ளார்.

மேலும் ” சமுர்த்தி கொடுப்பனவு” என விண்ணப்ப படிவம் ஒன்றினையும் வழங்கி அதனை பூரணப்படுத்தி செய்து அவர்களிடம் கையொப்பமும் பெற்றுள்ளனர்.

குறித்த மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.சமுர்த்தி கொடுப்பனவு பெற பணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...