நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.
மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆரம்பித்துள்ளது.
இந்த சேவையை பெற்றுக்கொள்ள உங்களுடைய நீர் கட்டணத்தில் கணக்கு எண் இடைவெளி விட்டு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் டயிப் செய்து 071-9399999 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியை (SMS) அனுப்ப வேண்டும்.
பின்னர், உங்கள் மின்னஞ்சல் கணக்கில் வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்யவும் பின்னர், வாடிக்கையாளர் இ-பில் சேவையில் பதிவு செய்து கட்டணம் செலுத்துவதற்கான வசதியைப் பெறலாம்.