அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம்,துறைமுகம், நீர்வழங்கள், வங்கிச் சேவை உடப்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை பகல் 12 மணியளவில் கோட்டை புகையிரதம் முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தாம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசு உரிய அவதானம் செலுத்தாவிட்டால் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என துறைமுக ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.
கண்ணீர் புகை பிரயோகத்தின் ஊடாக அரசாங்கம் போராட்டத்தை கலைக்கிறதே தவிர முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.