Date:

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அல்லது நாட்டிற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.

இதனிடையே, ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வௌிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நாடுகளின் தூதுவர்களுடனான கலந்துரையாடலின் போது ஆப்கானிலுள்ள இலங்கையர்களுக்காக ஆதரவு தருமாறு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள 86 இலங்கையர்களில் இதுவரை 46 பேரை அங்கிருந்து வௌியேற்றியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டொக்

இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெற்று...

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்...

சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க...

கோட்டாவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு...