யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான இரண்டு சிறுமிகளுக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
குறித்த இருவரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
சிவராத்திரி அன்று குடும்பத்தினர் கோவிலில் சென்றிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குடும்பத்தினர் கோவிலில் இருந்து வீடு திரும்பிய போது, வீட்டுக்குள்ளிருந்து நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில் குறித்த நபர் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியமை தெரிய வந்தது.
மேலும், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்த மற்றொரு 15 வயதான சிறுமி 23 வயதான கோப்பாய் இளைஞன் ஒருவர் அழைத்து சென்று குடும்பம் நடத்திய நிலையில் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.