கம்பளை, நாரான்விட்ட பகுதியில் பெண்ணொருவர் உணவுக்காக பலாக்காய் பறிக்க மரமேறி முற்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பீ.ஜீ. சாந்தி குமாரி என்ற 50 வயதடைய 4 பிள்ளைகளின் தாயே மரணித்துள்ளார்.
அவரது கணவர் தனியார் தறையில் தொழில் புரிபவர். இருப்பினும் நான்கு பிள்ளைகளும் பெண்களாகும். அதில் இருவர் பாடசாலை செல்பவர்கள். இதன் காரணமாக அவரது வாழ்க்கைச் செலவுகளில் சற்று சிரமம் காணப்படுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இவர் வழமையாக பலாக்காய், வடு பலாக்கா (பொலஸ்) போன்றவற்றை அடிக்கடி நாடுவதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையிலே மேற்படி சம்பவம் நடந்துள்ளது.
பலா மரத்திற்கு பக்கத்தில் இருந்த சாதிக்காய் மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முயற்சித்து முடியாத போது, அசாதாரண துணிவுடன் பலா மரத்தில் ஏறிய போதே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.
காயடைந்த மேற்படி பெண் ஐந்து நாட்கள் கம்பளை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற போதும் சிகிச்சை பயனளிக்காது மரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.