ஐக்கிய தேசியக் கட்சி அதன் யாப்பை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த யாப்பை தீர்த்துவது தொடர்பில் கட்சியின் செயற்குழு நேற்று கூடிய வேளையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயற்குழு நேற்று பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது.
முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணிகளான தயா பல்பொல, ரொனால்ட் பெரேரா மற்றும் நிஷங்க நாணயக்கார ஆகியோர் அடங்கிய குழுவொன்று கட்சியின் யாப்பை திருத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.