எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்த அரசாங்க அச்சக பிரதானி, உரிய தினத்தில் அவற்றை வழங்காமை காரணமாக, எதிர்வரும் 23, 24, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் வாக்களிப்பு இடம்பெறும் தினங்கள் மீண்டும் பின்னர் அறிவிக்கப்படுமென சமன் ஶ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.