இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பாக பிரபாகரன் மனைவி, மகள் உள்ளடக்கியதாக ‘‘ஆபரேஷன் துவாரகா ’’ என்ற பெயரில் விசாரணை நடவடிக்கையை புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த தவல் வெளியாகியுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நெடுமாறனின் இந்த அறிவிப்பு மூலமாக உறுதி செய்துள்ளன.
குறித்த அறிவிப்பு இலங்கை அரசியல் போக்கினை தலைகீழாக மாற்றும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டமாக இல்லாமல் ஒரு அரசியல் போராட்டம் தொடங்கப்படலாம் என்பதாகவும் அதை மத்திய பாஜக அரசு ஆதரிக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நெடுமாறனின் அறிவிப்பு மூலம் பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருப்பது உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைகின்றது.
இந்நிலையில் இலங்கை இராணுவம் பிரபாகரன் இறந்து விட்டதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.